google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அஜித்தின் ஆரம்பம்-ஓர் அலசல்

Friday, August 16, 2013

அஜித்தின் ஆரம்பம்-ஓர் அலசல்


(குறிப்பு-இது தல' அஜித் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ஆரம்பம் பற்றிய சில செய்திகளும் அட்டகாசமான படங்களும்.....)




aarambam

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவர இருக்கும் படத்திற்கு ஒரு வருடத்திற்கு மேலாகத் தலைப்பு வைக்கப்படாமல்...டீசர் கூட வெளிவந்து..கடைசியில் ஆரம்பம் என்று பெயரிடப்பட்டது... ஆயினும் அது பில்லா-2 படத்தின் கடைசியில்.......(நம்ம  'தல' அப்பவே சொல்லிச்சு..இது முடிவில்லா ஆரம்பம் என்று....அட..நம்ம தலையிலத்தான் எறல்ல)



 


படத்தின் தலைப்பு பற்றிப் படக்குழுவினர்.....ஆரம்பம் படத் தலைப்பு... எளிமையான அதே நேரம் சக்தி வாய்ந்தது  அதே நேரம் எந்தத் தனிப்பட்ட நபர் புகழ்ச்சி இல்லாமல் படத்தின் தீம் பற்றிக் குறிப்பிடுகிறது...என்று சொல்கின்றனர்.("The title is simple yet powerful, that isn't glorifying an individual, but signifying the theme of the movie.") பல சுபநிகழ்வுகளின் ஆரம்பம் என்பதின் குறீயீடு....


ajith

ஆரம்பம் படத்தில் அஜித்.....இணையக் குற்றம் அதிகாரி (cyber crime officer) வேடத்தில் சமூகத்தின் பல்வேறு செல்வாக்குமிக்க நபர்களின் முக்கிய விவரங்கள் சேகரிப்பவராக நடிப்பதாகச்   சொல்லப்படுகிறது...ஆனால் அந்தோ பாவம்....அவருக்கே இணையத்தில் தண்ணிகாட்டிவிட்டார்கள்.


                                      thanks-YouTube-RED PIXRED PIX

ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு நாள் இரவு முழுவதும்  மும்பையில் தல அஜித் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு டூப் இல்லாமல் சுட்ட சண்டைக்காட்சியை...யாரோ சுட்டு you tube-ல் கசியவிட்டு விட்டார்கள்...
இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் இன்னும் அந்தக் காட்சி இணையத் தளங்களில் நீக்கப்படவில்லை (உண்மையில் இது தல ஆரம்பம் படத்துக்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் ஆரம்பம்...தான்)

http://haihoi.com/Channels/cine_gallery/Aarambam-Tamil-Movie-Photostills-Gallery-8_S_201.jpg

ஆரம்பம் படம் பெங்களூரு,ஒரிஸா,ராஜஸ்தான்,துபாய்  போன்ற  இடங்களில் சிறப்பாகபடம்பிடிக்கப் பட்டுள்ளது.

இப்போதெல்லாம் எல்லா நடிகர்களும் இந்தப் படம் என் கடின உழைப்பு...உயிரக் கொடுத்து நடித்தேன் என்று புரூடா விடுகின்றார்கள் ஆனால் படத்தில் அப்படி எதுவும் தெரிவதில்லை ஆனால் உண்மையில் தல ஆரம்பம் படத்துக்கு மிகுந்த சிரமம் எடுத்து நடித்தார் என்பதின் அடியாளம் அவருக்குப் படபிடிப்பில் ஏற்பட்ட விபத்தும் எலும்பு முறிவும்...ஆயினும் அவர் படத்திற்கு இடையூறு உண்டாகாமல் தொடர்ந்து நடித்தது சினிமா மீது உள்ள அவரது உண்மையான விசுவாசத்தைக் காட்டுகிறது.



மேலும் இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நயன்தாரா, ராணா , ஆர்யா, டாப்சி, கிஷோர், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்ச்ரேகர் சுமா ரங்கநாத்...என்று......
ajith

சினிமாஉலகின் ஜித்தர்கள் தல அஜித் கூட நடிப்பது...ஆரம்பம்-வெற்றிக்கான ஆரம்பம்......

****************************************************************************
இங்கே........
தேசிங்கு ராஜா-ஒரு சிறப்புப் பார்வை




(குறிப்பு-இது விரைவில் திரைக்கு வரவிருக்கும் எழில் இயக்கத்தில் விமல்-பிந்து மாதவி நடிப்பில் வரவிருக்கும் தேசிங்கு ராஜா திரைப் படம் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை)................மேலும்
 link-http://parithimuthurasan.blogspot.in/2013/08/desinguraja-trailer.html


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1