google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஆர்யா சூர்யா-சினிமா விமர்சனம்

Sunday, September 8, 2013

ஆர்யா சூர்யா-சினிமா விமர்சனம்

(குறிப்பு-ஆர்யா சூர்யா திரைப்படத்திற்கு யாராவது விமர்சனம் எழுதுவார்கள் என்று பார்த்தால் பதிவர்கள் யாருமே எழுதியதுபோல் தெரியவில்லை.. அதனால் ஒர் ஆங்கிலச் சினிமா வலைதளத்திலிருந்து இந்த விமர்சனம்.... யாரும் படித்துவிட்டு என்னைத் திட்டாதீர்கள்...)



http://i1.wp.com/kollytalk.com/posters/wp-content/uploads/2013/08/Arya-Surya-T.-Rajendar.jpg?resize=433%2C591

இப்படம் நகைச்சுவை விதிகளை மீறி ஓங்கியிருக்கிறது.(அண்ணேன்...அந்த விதிகளைச் சொன்னா கொஞ்சம் நல்லாயிருக்குமே..ஹி..ஹி..)நகைச்சுவை படங்களின் பட்டியலில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்  ஆர்யா சூர்யா படமும் சேர்ந்துள்ளது.இராமநாராயணன் தனது 126-வது படமாகத் துணிவுடன்..? (உண்மையான கூற்று..அப்படி போடு அருவாள) இயக்கியுள்ளார்

http://i2.wp.com/www.kollytalk.com/wp-content/uploads/2013/08/Arya-Surya-Movie-Still-03.jpg?resize=420%2C279

நடிகர்கள்-பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன், விஜய டி ராஜேந்தர், விஷ்ணுபிரியன்,நட்சத்ரா,கங்கை அமரன், கோவைசரளா,வெண்ணிராடை மூர்த்தி மற்றும் நளினி கேமரா ஆர் செல்வராஜ் இசை ஸ்ரீகாந் தேவா  திரைக்கதை வசனம் புகழ் மணி 

freeonlinephotoeditor
கதை-
நகைச்சுவைப் படங்களுக்குக் கதையே தேவை இல்லை (அண்ணேன்..இப்பலாம் தமிழ்ல எந்தப்படத்துக்கும் கதை தேவையில்லை அது தெரியாதா உங்களுக்கு...?) நீங்கள் சத்தமா சிரிக்கவேண்டும் என்பதற்காகக் காட்சிகளைக் குழைத்துப் போட்டுள்ளார்கள் (ரொம்ப வேக வச்சிப்புட்டாயிங்களோ...?) அப்படித்தான் இருக்கிறது ஆர்யா சூர்யா படம் 

freeonlinephotoeditor

ஆயினும் கதை விசயத்தில் இயக்குனர் முந்தயத் தமிழ் திரைப்படங்களின்  கதைகளிலிருந்து ரொட்டியில்  ஒரு துண்டை எடுத்து நமக்குப்  படைக்கிறார் (தலைவா....இதாவது பரவாயில்ல..இங்க நாலு தமிழ் பட DVD பார்த்து அதிரடிப் படமே எடுத்துப்புடுராயிங்க...) இரண்டு இளைஞர்கள் இசையமைப்பாளர்கள் ஆக வாய்ப்பு தேடி சென்னை வருவதே கதை

freeonlinephotoeditor

அவர்கள் முயற்சியில் எதிர்கொள்ளும் தடைகளை நகைச்சுவையாகச் சொல்கிறார்கள் கங்கை அமரன் இந்தக் காமெடி கலவரத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறார்.(அவரும் அவருடைய அண்ணனும் அப்படி வந்தவங்கதானே...அதனால அவருக்கு ரொம்ப ஈஸியா இருந்திருக்கும்)

freeonlinephotoeditor

காட்சி நிகழ்வுகள்(Performance)
பவர் ஸ்டாரை மையமாக வைத்தே அவரைச் சுற்றியே கதை எழுதியுள்ளார்கள் (அண்ணேன்..அப்படினா புழல் சுற்றி ஷூட்டிங் நடந்த மாதிரி தெரியலையே...) அவர் உடனடி சிரிப்பு வருவதற்காகத் திரையில் தனது முத்திரை பாணியில் (trademark style) நடித்துள்ளார்.(ஆமாம்..அண்ணேன் அவரு இப்பதான் புழல் கூத்துப்பட்டறையில மெருகேற்றி வந்திருக்காரு....) இளம் ஹீரோவாக விஷ்ணுபிரியன் நடிக்க...ஒரு மிகப் பெரிய காமெடி நடிகர்கள் கூட்டமே தங்களது வலிமையைக் காட்டி(என்ன..ரொம்பக் கடிச்சிப்புட்டாயிங்களா...?) நடித்துள்ளனர் 

freeonlinephotoeditor
தொழில்நுட்ப சிறப்புகள் 
ஸ்ரீகாந் தேவா கொச்சை வழக்கத்தில் உள்ள வார்த்தைகளை வைத்து....(தகடு-ங்குறது அப்படியான வார்த்தை இல்லையே..) T.R.-ரும் LR ஈஸ்வரியும் பாடிய பாடல் படத்தின் சிறப்பம்சம் ஒரு மாதிரி இசையும் (ஒருமாதிரி இசையா..? அண்ணேன் அது கொட்டாங்குச்சி...தட்டிப்பாருங்க தாளம் வரும்) பெரிய காட்சியமைப்பும் சுறு சுறுப்பான நடனமும் T.R.-க்கு நல்லாவே உள்ளது .செல்வராஜ்- கேமரா பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கிறது    

freeonlinephotoeditor
ஆய்வு-
இராமநாராயணன் சினிமாத்துறையில் நகைச்சுவை படங்கள் தயாரிக்கும் மூத்த மாஸ்டராக(ஆமாமம்..ங்கோ...மசாலா கரெக்ட்டா போடுவார்..நக்கல் தூக்கலா இருக்கும் சில நேரம் விக்கல் வரும்) உள்ளார் இப்படம் அதற்கு விதிவிலக்கல்ல பவர் ஸ்டாரை சுற்றி பின்னப்பட்டுள்ள இப்படம் திரையரங்கில் முன்னாடி முதல் வரிசையில் உள்ளவர்களுக்கு (விசிலடிச்சான் குஞ்சிகளா...?) கொண்டாட்டம்  

                    
                       thanks-YouTube-by thenandalfilms

(அண்ணேன்...இவரும் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதியிருப்பாரோ...அப்படியே விக்கி (wiki) விக்கி விமர்சனம் எழுதியிருக்காரே..படத்தில ஒரு காட்சியைக் கூட சொல்லவில்லையே  என்னக் கொடுமைடா இது? எதுக்கும் thanks-sulekha.com  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1