google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சங்கரராமா?

Wednesday, November 27, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சங்கரராமா?


"த்தூ...
என்னய்யா....இது?
புளியோதரை 
இப்படி புளிக்கிறது.
கூப்பிடு அந்த சமையல்காரரை..."
கோபத்தில் கத்தினார் கடவுள் 

கடவுளுக்கு
படைக்கப்பட்ட
புளியோதரையில்....
அளவுக்கு அதிகமாக
புளியை போட்டுவிட்டார் 
கோயில் சமையல்காரர்
சங்கரராமன்  

சங்கரராமா சங்கரராமா 
கடவுள் கூப்பிடுகிறார் 
காலம் கடத்தாமல் ஓடிவா 

"அட..நீதானா 
அந்த சமையல்காரன் 
புளியோதரையில் 
புளிபோட்டவன் 
இதில வேற உனக்கு 
தலைமை பதவி வேண்டுமா...?" 

கோபம் கொண்ட கடவுள்
ஆத்திரத்தில்
ஏதோ சொல்லிவிட்டார்

பொறுக்கமுடியாத
சங்கரராமன்
பட்டப்பகலில்
கடவுள் முன்னிருந்த
கல்தூணில்
முட்டி மோதிக்கொண்டு
தலையை உடைத்துக்கொண்டார்
தன் உயிரை மாய்த்துக்கொண்டார்

சொர்க்கலோகத்தில்....
அரியாசனத்தில் கடவுள் 

சங்கரராமா சங்கரராமா

சங்கரராமனும்
சாஸ்டாங்கமாக
காலில் விழுந்தார்

சிரித்துக்கொண்டே
கடவுள் சொன்னார்

"சங்கரராமா
பூலோகத்தில்
தினம் நீ செய்யும் 
புளியோதரையில் 
பூரித்துப் போனேன்......
உமது
நெடுநாள் கோரிக்கை
நிறைவேறப் போகுது 
இன்று முதல்
இங்கே நீர்தான்
தலைமை சமையல்காரர்

இதற்குத்தானே
ஆசைபட்டாய் சங்கரராமா...?"

(என்ன... கவிஞரே
ஒன்னும் புரியல
இரண்டாம் உலகம் மாதிரி
இது பேண்டஸி கவிதையா..?
த்தூ.......
நியாயன்மார்களே 
இந்தக் கவிஞனை 
நைலான் கயிற்றில் 
தொங்க போடுங்கள்...
இல்லை இல்லை 
இவன் எழுத்தாணியை பிடுங்கி 
இவன் தலையில்  குத்துங்கள்...
ஸ்.....அப்பாடா......ஆ....)
  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1