google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நானறிந்த இலக்கியம்-1

Monday, December 2, 2013

நானறிந்த இலக்கியம்-1



வரையப்பட்டவைகள் அனைத்தும் ஓவியங்கள் அல்ல
செதுக்கப்பட்டவைகள்அனைத்தும் சிற்பங்கள் அல்ல என்பது போல...
எழுதப்பட்டவைகள் அனைத்தும் இலக்கியம் ஆகின்றதா....?


அறிவியல் மற்றும் அறிவியல் அல்லாத எழுத்துக்களும் கவிதை என்றும் உரைநடை என்றும்  உருவம் கொண்டு நிற்கின்றது
அறிவுச்சார்ந்த கற்பனைக் கலந்த கவிதை,கதை,நாடகம்,நாவல், கட்டுரைகள்... போன்ற படைப்புகள் இலக்கியமாக போற்றப்படுகின்றது 

அதேநேரம் பத்திரிகைகளில் வருகின்றஅறிவியல் சாரதா உண்மைத் தகவல்கள் இலக்கியமாகுமா...? ஆம்..அதுவும் இலக்கியமே
உண்மையில் எவைகள் எல்லாம் மக்களால் புரிந்துகொள்ள உகந்தவைகளை உட்கொண்டுள்ளதோ அவைகள் இலக்கிய படைப்புகளாகும்

இலக்கியப்படைப்புகளில் கவிதை மட்டுமே மொழியின் ஒலியை உள்வாங்கி நிதர்சனம் ஒளிர அழகியல் அற்புதம் படைக்க வல்லது......


மரபுக்கவிதையில் காவியம் படைத்த பெரும் புலவர்கள் வார்த்தைகளால் வாசிப்பவர்கள் உள்ளத்தில் காதல்,காமம்,குற்றம்,சாகசம்...போன்ற உணர்வுகளை விதைத்தார்கள்..........

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.....

என்ற கம்பனின் வரியை வாசிப்பவர்கள் இதயத்தில்
காதல் தளிர்விடும்........இன்பக் காதல் கசிந்து  தேன் துளியாக விழும்

அதே நேரத்தில்.......
அரசவையில் தன் கணவனை கயவன் என்று கொன்ற மன்னன் முன் சீற்றம் கொண்ட கண்ணகியை இளங்கோ இப்படி சொல்கின்றார்...

http://f0.pepst.com/c/901CA0/515329/ssc3/home/070/ever.in.love/albums/devi_kannaki.jpg_480_480_0_64000_0_1_0.jpg

‘வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
“இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’ என-
..........இதை வாசிப்பவர்கள் குற்றமற்றவரின் கோபத்தை உணர்வார்கள்
கண்ணகியின் நீதிகேட்க்கும்  ஒரு சில வரிகளில் ஓராயிரம் கதைகள் ஒளிந்திருக்கும்

‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என- ‘பெண் அணங்கே!
............என்று அந்த எழுத்துக்களை வாசிக்கும் போதே வாசிப்போர்குக்கு நடுக்கம் தரும் வார்த்தைகள் 

கோபத்தின் கொந்தளிபில் சீறும்  எழுத்துக்கள்
‘பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யனோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என...........
என்று குற்றம் புரிந்த மன்னனின் கூற்றில்..............
இப்படி இலக்கியங்களில் கவிதையே முன்னோடியாக இருந்தது 
ஆனால் இன்றோ அதே கவிதை இலக்கியம்......
                                                                                              ...................................(தொடரும்)   
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1