google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நல்லவேளை நான் பிரம்மன் ஆகவில்லை

Sunday, February 23, 2014

நல்லவேளை நான் பிரம்மன் ஆகவில்லை

சில சினிமாக்களை பார்க்கும் போது நமது சிறுவயது நினைவுகள் வந்து நம்மை கிச்சு கிச்சு மூட்டும்.....அந்த வகையில் சமீபத்தில் பிரம்மன் படம் பார்க்கும் போது..........

அப்போது  எனக்கு 10 வயது இருக்கும் எங்கள் ஊரில் உள்ள கதவில்லாத கட்சி காரியக் கமிட்டி அலுவலகத்தில் நானும் எனது நண்பர்கள் இரண்டு பேர் மற்ற சிறுவர்களுக்கு சினிமா படம் காட்டியதை நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகின்றது........

நான்கு  நோட்டு அட்டைகளை சதுர பெட்டியாக  செய்து அதில் நேர் எதிர் இரண்டு துவாரங்கள் போட்டு......ஒரு துவாரத்தில் ஒரு வட்ட லென்ஸ் பொருத்தி வைத்து.........அதுதான் எங்கள் சினிமா புரோஜெக்டர்    

வெயிலில் ஒரு உடைந்த கண்ணாடியைக் காட்டி அதிலிருந்து வரும் வெளிச்சத்தை அந்த அட்டைப்பெட்டியில் உள்ள லென்ஸ் மீது அடிக்கச் செய்தால்  எதிரில் இருக்கும் சுவற்றில் பெரிய சதுரமாக ஒர் ஒளித்திரை தெரியும்.......இன்னொரு துவாரத்தில் பழைய படத்தின் ஒரே ஒரு பிலிமைக் காட்டினால் சுவற்றில் ..........சினிமா 

அப்புறம் இன்னும் கொஞ்சம் அறிவு அதிகமாக வேலைசெய்தது எனக்கு...இன்றைய சிடி போல் வட்டமாக பேப்பரில் செய்து அதில் தொடர்வாக சில துளைகள் வெட்டி.....வரிசையாக நிறைய பிலிம்களை வைத்து வட்ட தட்டு போல் செய்து......

அந்தக் காகித  பிலிம் வட்ட தட்டின் நடுவில் ஒரு துளையிட்டு புரோஜெக்டர் அட்டைப்பெட்டியில் ஒரு ஆணியில் மாட்டி ஒவ்வொரு பிலிமாகச் சுழலச் செய்தேன்...விரைவாக சுவற்றில் படங்கள் மாறி மாறி தெரிய சுவாரஸ்யமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் 

அப்படி படம் காட்டிய எங்கள் கூட்டத்தில் யாருக்கோ குறுக்கு புத்தி நுழைந்தது படம் பார்க்க மற்ற சிறுவர்களிடம் காசு கேட்காமல் ஒரு துண்டு பாக்கு கட்டணமாக வசூல் செய்தோம். அப்புறம் சேர்ந்த பாக்குகளை சப்பாணி தாத்தா கடையில் கொடுத்து மிட்டாய் வாங்கிக்கொள்வோம் இரண்டு நாள்தான் இது தொடர்ந்தது பிறகு  வந்தது வினை..?

யாரோ ஒரு பையன் தன் பாட்டி வீட்டில் வாங்கி வைத்திருந்த பாக்குகளை   மொத்தமாக அள்ளிவந்து தொடர்ந்து எங்கள் படம் பார்க்க உட்கார்ந்துவிட.....

பாக்கைத் தேடிய பாட்டி காணாமல் எதுவும் புரியாமல் கடைக்கு மீண்டும் பாக்கு வாங்க வர.......வழியில் எங்கள் சினிமா திரையரங்கில் அவரது பேரனைக் கண்டு.........இப்ப பாட்டிக்கு எல்லாம் புரிஞ்சி போச்சு...

விழுந்தது  அடி .எங்களுக்கு.......கிழிந்தது அட்டைப்பெட்டி புரோஜெக்டருக்கு... அத்தோடு சினிமா ஆசை முடிந்தது 

பிரம்மன் படம் ஆரம்பிக்கும் போது இப்படி படம் காட்டும் சிறுவர்களை கான்பித்தப் போது நினைவுப் பிரதிபலிப்பாக உடம்பு புல்லரித்தது....அப்புறம் படம் போகப்போக ஏனோ...? உணமையில் உடம்பில் சொறி-சிரங்கு போல் அரித்தது......

பிரம்மன் சசிகுமார் போல் ஏதேனும் ஓட்டை தியேட்டரை லீஸ்க்கு எடுக்கவில்லை என் நண்பர்கள் யாரும் மதன்குமார் போன்று டைரடக்கரும் ஆகவில்லை.......என் காதலையும் தானம் பண்ண எந்த நன்பனும் எனக்கு இல்லை............
நல்லவேளை நான் பிரம்மன் ஆகவில்லை  



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1