google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மக்கழே...ஓட்டுக்கு யார் துட்டு கொடுத்தாலும் வாங்குங்கள்-கேப்டன்

Saturday, March 15, 2014

மக்கழே...ஓட்டுக்கு யார் துட்டு கொடுத்தாலும் வாங்குங்கள்-கேப்டன்

மக்கழே...ஓட்டுக்கு யார் துட்டு கொடுத்தாலும் வாங்குங்கள்..ஆனா ஒட்டு போடும்போது சிந்தித்து போடுங்கள் என்று  கேப்டன் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது.. எப்படி? என்றால்........
அரசியல் ஒர் அருமையான வியாபாரம் என்று சொன்னார் நம்மை ஆண்ட ஆங்கிலேய நாட்டின்  அரசியல்வாதி வின்சென்ட் சர்ச்சில் அப்படியென்றால் வேட்பாளர்கள் ஓட்டுக்களை வாங்கும் வியாபாரிகள்தானே...? இப்படியிருக்க ஏன்  வாக்காளன்  தன் ஓட்டுக்கு விலை பேசக்கூடாது....?

 
அந்தக் காலத்திலேயே அறிஞர் அரிஸ்டாட்டில் அரசியலைப் பற்றி சொல்லும் போது.........அரசியல்வாதிகள் ஒய்வு எடுப்பதில்லை ஏனென்றால் அரசியல் அவர்களுக்கு சுகவாழ்வின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் சந்தோசத்தையும் வழங்குகின்றது அதனால்தான்  நம்ம அரசியல்வாதிகள் மண்ணுக்குள் போகும் வரை பதவி நாற்காலியை விட்டு விலகுவதில்லை என்றும்.....ஓட்டுக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயங்குவதில்லை என்றும்...

இதோ வில் ரோஜர்ஸ் என்ற மேதை சொல்வதைக் கேளுங்கள்...அரசியலில் தோற்றுப் போவதற்குகூட நிறைய பணம் செலவு செய்ய வேண்டும் இப்போது புரிகின்றதா...? ஏன் இவர்கள் ஒரு நோட்டு ஒரு வோட்டு என்று தேர்தல் காலங்களில் உண்டியல் குலுக்குகின்றார்கள் என்று....தங்களிடம் இருக்கும் கறுப்பு பணத்தை கணக்கில் கொண்டுவரவா...?

ஈசாப் கதைகளில் சொல்லப்படும் கருத்து.......சமுதாயத்தில்  சின்ன திருடர்கள் தடை செய்யப் படுகின்றார்கள் பெரிய திருடர்கள் பொது வாழ்வுக்கு அங்கீகரிக்கப் படுகின்றார்கள் அப்படியிருக்க அந்தப் பெரிய திருடர்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தை இப்படி தேர்தல் காலங்களில்தான் ஏழை மக்கள் தங்கள் இழந்த பணத்தை மீட்க முடியும் 

Made with FreeOnlinePhotoEditor.com

1983-காலகட்டத்தில் ஒரு மளிகை கடை வியாபாரி மகனான நான் பாதை மாறி முதுகலை ஆசிரியர் படிப்பு படித்து முடித்து சுய வாழ்வாதாரம் தேடி வேலைக்காக ஆண்டுகள் பல அலைந்து திரிந்து அன்றே பல ஆயிரங்களை பல  அரசியல்வாதிகளிடம்   இழந்து,வாழ்க்கையை தொலைத்ததும் ... மீண்டும் ஒரு வியாபாரியாக மாறி (அரசியல் வியாபாரியாக அல்ல) பிழைத்துக் கொண்டதும் நிஜம்......
என்னைப்போல் நிறைய ஏமாளிகள் அன்றும் இன்றும் இங்கே  உண்டு.

ஆனால்...இப்போது தேர்தல் நடத்தும் நியாயன்மார்கள் விரட்டி விரட்டி பணவேட்டை நடத்தி நாளிதழிலும் தொலைக்காட்சிகளிலும் நெஞ்ச நிமிர்த்தி படம் காட்டுகின்றார்கள் இந்த அரசியல் வியாபாரிகளை விட்டுவிட்டு உண்மையான வியாபாரிகளை வதைக்கின்றர்கள் 
கேப்டனின்  ஒவ்வொரு பேச்சையும் கேலி செய்யும் ஊடகங்கள்,சமுக வலைதளங்கள் எல்லாம்......மக்கழே...ஓட்டுக்கு யார் துட்டு கொடுத்தாலும் வாங்குங்கள்...என்று கேப்டன் தனது முதல் பிரச்சாரத்தில் சொன்னபோது......
எதுவும் பேசவில்லை

அரசியலில்... வல்லவர்கள்  எப்போதும் நல்லவர்களாக இருப்பதில்லை சிலநேரங்களில் கோமாளிகளும் அறிஞர்களாக இருக்கின்றார்கள் 
கேப்டன்....உங்களுக்குள் ஓர் அரிஸ்டாட்டிலைப் பார்க்கின்றேன்... உங்களுக்குள்  ஒரு வின்சன்ட் சர்ச்சில் ஒளிந்து இருக்கின்றார்......
வெற்றியோ தோல்வியோ.... தொடரட்டும் உங்கள் அரசியல் பயணம்.... 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1