google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: எழுவர் விடுதலையும் கலைஞரின் கருத்தும் சரியா?

Monday, April 21, 2014

எழுவர் விடுதலையும் கலைஞரின் கருத்தும் சரியா?


பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலை வழக்கு குறித்த  தீர்ப்பு வரும் 25-தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று நீதிபதி சதாசிவத்தின் அறிவிப்பை விமர்சித்த  கலைஞர் இன்று அதற்கு விளக்கம் அளித்துள்ளார்


23 ஆண்டுக்கள் சிறை தண்டனை அனுபவிக்கும் ஏழு பேருக்கும் நீதி மன்றமே விடுதலை செய்யலாம் என்று முடிவு செய்தபிறகும்......இவ்விசயத்தில் கலைஞரின் கருத்து  அரசியல் காழ்புனர்சியில்  பேசியது என்போர் உண்டு...

அதேநேரம்  நீதிபதி சதாசிவம் போன்றவர்கள் அதிமுக அரசுக்கு சாதகமாக செயல்படும் நோக்கத்தை இது காட்டுவதாக குற்றம் சாட்டுபவர்களும் உண்டு

இன்று தனது மகன் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை யாரும் அரசியல் ஆக்கவேண்டாம் என்று அற்புதம் அம்மாள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க...
கலைஞர் lபதில் :- அவர்களை விடுவிக்க வேண்டுமென்று தி.மு. கழகம் கோரிக்கை வைத்ததை அனைவரும் அறிவார்கள். ஆனால் நீதிபதிகள் இது போன்ற விஷயங்களை அரசியல் ஆக்கக் கூடாது என்பதற்காகத் தான் சதாசிவம் பொது விழா ஒன்றில் இது பற்றி பேசுவது சரிதானா என்று கேட்டிருந்தேன். அரசியல் ஆக்குவதற்காக அல்ல....என்று விளக்கம் அளித்துள்ளார்

ட்விட்டர்களின் பார்வையில்...........

பாரதி @BharathiBigB 
எழுவர் விடுதலை குறித்து நீதியரசர் தேர்தல்சமயத்தில் முடிவுஎடுப்பது ஏற்புடையதில்லை-கலைஞர் #ஏழுப்பேருக்கு நல்லது நடக்கும்ன்னா எதுவும் தப்பில்ல…

பிச்சைக்காரன் @pichaikkaaran 
நீதியரசர் சதாசிவம் மேல் நடவடிக்கை எடுக்க திமுக , காங்கிரஸ் தேர்தல் கமிஷனை வலியுறுத்தல் . எழுவர் விடுதலை அரசியல் விளையாட்டாகிறது

தமிழரசி @barathi_ 
கருணாநிதி எழுவர் விடுதலை பத்தி என்ன சொன்னார், Fbல ஒரே ஆர்ப்பாட்டமா இருக்கே!

Maharaja ™ @Maharaja_King 
எழுவர் விடுதலையில் இன்னுமா புரியவில்லை கட்டுமரத்தின் தற்போதைய நிலைபாடு #போய் கசப்பு மருந்த எடுத்து குடிங்க உளுத்தம் பருப்புகளே

கோவை_கமல் @KOVAI_KAMAL 
எழுவர் விடுதலை...வேணாம்னு சொல்லலை! தேர்தலுக்கு முன்னாடி ஏன் எதுக்குன்னு தான் கேக்கறாங்க !# நியாயமான கேள்வி!

Niyaayath Tharaasu @Niyayaththarasu 
ஏமாற்றி வோட்டு வாங்குவதற்காகக் கூட எழுவர் விடுதலையை ஜெயலலிதா பயன்படுத்துகிறார் என்று கூவும் வஞ்சகன் கருணாநிதியே

ட்விட்டர் தாத்தா @PeriyaStar 
எழுவர் விடுதலை குறித்து நீதியரசர் தேர்தல்சமயத்தில் முடிவுஎடுப்பது ஏற்புடையதில்லை-கருணாநிதி # ஏற்க முடியாத்துனா நீங்க தொங்கிற வேண்டியதுதானே!

✍ மழலை™ @WritterMazhalai 
எழுவர் விடுதலை குறித்து நீதியரசர் தேர்தல்சமயத்தில் முடிவுஎடுப்பது ஏற்புடையதில்லை-கருணாநிதி #தேர்தல் ன்னா சோறு தண்ணி இல்லாம வந்து கதறுவாப்ல..

நாட்டி நாரதர் @mpgiri 
எழுவர் விடுதலை குறித்து நீதியரசர் தேர்தல்சமயத்தில் முடிவுஎடுப்பது ஏற்புடையதில்லை-கருணாநிதி #உங்களுக்கு இது தேர்தல்.அவங்களுக்கு இது வாழ்க்கை

Satheesh Kumar @saysatheesh 
சதாசிவம் அவர்கள் எப்படியாவது அதிமுகவை ஜெயிக்க வைக்கணும்ங்கற முடிவுல இருக்காரோ என்னவோ #எழுவர் விடுதலை

இப்படி வலைதளங்களில் இரு வேறு கருத்துக்கள் உலா வருகின்றன   நண்பர்களே! உங்கள் பார்வையில்...........

எழுவர் விடுதலையும் கலைஞரின் கருத்தும் விளக்கமும் சரியா?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு-22/4/2014


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1