google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ரஜினியை சந்திப்பது மோடிக்கு வெற்றி தருமா?(வலைப்பேச்சு)

Saturday, April 12, 2014

ரஜினியை சந்திப்பது மோடிக்கு வெற்றி தருமா?(வலைப்பேச்சு)

இன்றைய  மோடி-ரஜினி சந்திப்பு பற்றி சமுக வலைதளம் ட்விட்டர் வலைப்பேச்சும்........ரஜினியை சந்திப்பது மோடிக்கு வெற்றி தருமா? என்ற கருத்துக்கணிப்பும்

இன்று பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினியை தேர்தல் நேரத்தில் சந்திப்பது........இதனால் மோடிக்கு ஏதேனும் அரசியல் லாபமா? 

மோடியுடன் ரஜினி இந்த சந்திப்பின் மூலம் தனது  மதவாத நடுநிலைமையை மறந்துவிட்டு  மதவாத அரசியல் சாக்கடையில் காலைவிடுவாரா? என்று அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க.......

மோடி-ரஜினி சந்திப்பால்  ரஜினியின் கோச்சடையான்  படத்திற்கு தமிழகத்தில் வில்லங்கம் வருமா....? அல்லது அவரது படத்திற்கு இன்னும் பக்கபலமாக இருக்குமா...?
.....................என்ற கேள்விகளுக்கு விடைகாணும் முன்.......

சமுக  வலைதளம் ட்விட்டரில்...............

ஜானகிராமன்@saattooran 
ரஜனி அரசியல் சகதியில் காலை வைக்க மாட்டார் என நம்புவோம். #அண்ணாமலைக்கு அரோகரா

ரூட்டு தல @routeu 
ரஜினியைச் சந்தித்தால் நாற்பது தொகுதிகளையும் கைபற்றி விடலாம் என நினைக்கும் மோடி ஒரு முட்டாள்.இது ரஜனிக்கே தெரிந்து இருக்கும்

வைரவன்@raajeswaran 
இப்பவும் ரஜினியோட வாய்ஸுக்கு மவுசு இருக்கும்னு நம்பறாங்களே?

Kalai_கலை@Kalai_02 
ரஜினி வீட்டுக்கு செல்கிறார் மோடி!அப்பிடியே நமீதா வீட்டுக்கும் கொஞ்சம் போயிட்டு வந்தீங்கன்னா நல்லா இருக்கும்.

உளவாளி @withkaran 
ரஜினிய வாய்ஸ் கொடுக்க வைக்க ஒரே வழி..கோச்சடையான் பொட்டிய தூக்கிட்டு ஓடுறதுதான்.

தரலோக்கலு லேஜி »@somperi 
ரஜினியைசந்தித்து ஆதரவுகேட்பார்மோடி -செய்தி #போன சட்டமன்ற தேர்தல்ல ஸ்டாலின் போய் பாத்தாரு படுதோல்வி!இப்ப மோடி வீணா வினைய தேடி உக்காரபோறாப்டி!

சைதை தமிழரசன்» @Rajakumaaran 
ரஜினியைசந்தித்து ஆதரவுகேட்பார்மோடி -செய்தி # பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி

mathimaran@mathimaran 
‘கோச்சடையான்’ தோல்வி மேலும் உறுதியானது. மோடி இன்று ரஜினியை சந்திக்கிறார்.

நண்பன்@thannivandi 
நம்மள இவன் தரதர-ன்னு எங்க இழுத்துட்டு போகப் போறானோ தெரியலையே.. #ரஜினி மைண்ட் வாய்ஸ் #மோடி

ஹரஹர மகாதேவ!!!@chilledbeers 
ஒருவேளை மோடி ஜெயிச்சுட்டா!கோச்சடையானுக்கு உதவுமோன்னு கொக்கி போட்டு வைப்பார் ரஜினி.அம்மா கமலுக்கு தண்ணிகாட்டின மாதிரி ஏதாச்சும் பண்ணிட்டா?

புருடா_@Mr_puruda_ 
இன்னைக்கும் நாளைக்கும் ரஜினி ரகுவரனா மாறியிருப்பாரு..;-)))) #ஐ நோ, ஐ நோ, ஐ நோ.......

சூனா பானா@SoonaaPaanaa 
ரஜினி அடிக்கடி எதுக்கு இமயமலை போறாருனு இப்போ புரியுதா?? தக்காளி ஊருல இருந்தா தானேடா வந்து பாப்பீங்க..

 நாயோன்@writernaayon 
ரஜினிய சந்திச்சு மோடி ஆதரவு கேட்கப் போறாராம். இதுக்கு அவரு கெஜ்ரிவால் கூடவே கூட்டணி வச்சுக்கலாம். ;-//

பசி.!@Pa_Siva 
பதவியை அடைய கழிப்பறையில கையை விட சொன்னாலும் விடுவானுங்க...!# ரஜினி மோடி சந்திப்பு

வெ.புகழ்மணி@pugalmani55 
அப்படியே மோடி ரஜினியை சந்திச்சிட்டாலும்!நாட்டுல மழை கொட்டோ கொட்டு என கொட்டும் அட போங்கய்யா!

Gokila Honey@gokila_honey 
கோச்சடையான் ரிலீஸ் ஆகுமா ஆகாதான்னு மோடி ரஜினிய சந்திச்ச கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுடும். வாய்ஸ் குடுத்தா ஆப்பு கன்ஃபார்ம் :P

Robert Kennedy@robkenca 
இந்தியா முழுதும் மோடி அலை மோடி அலை என்று சொல்லி விட்டு ரஜனி வீட்டு வாசலில் மோடி தவம் கிடந்தால் என்ன அர்த்தம்..

புத்திசாலி ராஜா@raatworaa 
ரஜினி வீட்டில் போய் சந்திக்கிறார் மோடி.. ரைட்டு சைத்தான் சைக்கிள்ல வருது. ரஜினி மைன்ட் வாய்ஸ்

ட்விட்டர் தாத்தா@PeriyaStar 
அடேய் ரஜினி பாஜக பத்தி யாருக்கும் தெரியாத காலத்திலயே சப்போர்ட் பண்ணினவர்யா. ஆனா இது கூடத் தெரியாமத்தான் அரசியல் கம்பு தூக்குனீகளா!!!

ஈழ நிலவன்@nagajothin 
ஒவ்வொரு தடவை தேர்தல் வரும்பொழுதும் ரஜினி அவர்கள் உண்மையிலே தன்னை தானே அடக்கி கொண்டு பாத்ரூம விட்டு வெளியில் வருவதில்லை!!!!

Rajh Selvapathi@RajhSelvapathi 
மோடி அலை ஓய்ந்துவிட்டதா? அல்லது கோச்சடையனுக்கு விளம்பரமா?

புத்திகாலி@Tottodaing 
அப்டியே கலைஞரையும் சந்திச்சு, சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க மோடிஜி... ஆட்டம் களை கட்டும்!


ரஜினி-மோடி சந்திப்பு பற்றி இப்படி  பல்வேறு கருத்துக்கள் வலைதளங்களில் உலா வருகின்ற வேளையில்...........
கர்நாடகா சிக்மகளுரில் மோடி பேசும் போது புத்தாண்டு வாழ்த்து சொல்லவே ரஜினியை சந்திப்பாதாக சொல்கின்றார்...ஹா...ஹா 

பதிவுலக  நண்பர்களே! உங்கள் பார்வையில்...........

ரஜினியை சந்திப்பது மோடிக்கு வெற்றி தருமா?


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...............முடிவு-15/4/2014

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1