google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அம்மா மருந்தகத்தால் ஆதாயம் யாருக்கு?

Friday, June 27, 2014

அம்மா மருந்தகத்தால் ஆதாயம் யாருக்கு?


மலிவு விலையில் மக்களுக்கு மருந்து வழங்க வேண்டும் என்று தமிழக அரசு திறந்துள்ள அம்மா மருந்தகத்தால் மக்களுக்கு ஆதாயமா...? இல்லையேல் எத்தனையோ அரசு திட்டங்கள் போன்று இதுவும் விளம்பரமா...?

அம்மா உணவகம்.....  நடுத்தர,ஏழை எளிய மக்களுக்கும் மலிவு விலையில் உணவு வழங்கி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது அதே நோக்கத்தில்தான் அம்மா மருந்தகம் இப்போது பத்து இடங்களில் திறக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு பத்து விழுக்காடு தள்ளுபடி விலையில் உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் வழங்கப்படும்  என்று சொல்லப்படுகிறது 

இதே போன்று கூட்டுறவு துறை மூலம் 15 விழுக்காடு தள்ளுபடியில் தமிழகம் முழுவதும் 205 மருந்தகங்கள் செயல்படுகின்றன ஆனால் அவைகளுக்கும் அம்மா மருந்தகங்களுக்கும் இப்போது பெரிய வேறுபாடு இல்லை 

ஆயினும் இனிவரும் காலங்களில் இன்னும் 90 அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டு அடக்கவிலையில் மருந்துகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது அவாறு செயல்படவில்லை எனில் இந்த அம்மா மருந்தகம் அம்மா அரசுக்குக்கு சும்மா விளம்பரமே 

குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று பாடிக்கொண்டு... ஒருபுறம் டாஸ்மாக் மூலம் போதை மதுவகைகள் விற்பனை செய்யும் அம்மா அரசு.........

இன்னொருபுறம் ஏழை எளிய மக்களின் உயிர்காக்கும் மருந்துகள் வாங்க வாங்க 10% தள்ளுபடி என்று கூப்பாடு போடுவது...........






































(அப்படியே...மக்களுக்கு மலச்சிக்கல் வந்தால் அம்மா மருந்தகம் மூலம் தரமான பேதி மாத்திரை கொடுங்கள்.....அதுவும் இலவசமாக கொடுங்கள்)  
ஆமாம்....கடையில் வாங்கும் பேதி மாத்திரைகள் மேலும் சிக்கலாகாக இருக்கு........பந்து....முழு அடைப்பு 

அய்யகோ...
நாம் என்னமாதிரி உலகத்தில் வாழுகிறோம் என்று தெரியவில்லையே?.......அம்மா மருந்தகத்தால் ஆதாயம் யாருக்கு?



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1