google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தேவையா?

Saturday, June 21, 2014

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தேவையா?


இன்று அரசியல்வாதிகள்,நடிகர்கள்,பிரபலங்கள் தங்கள் பிறந்தநாளை படு அமர்களமாக கொண்டாடி....மனித வாழ்க்கையில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தேவையா? என்று கேட்கும் நிலையில்.......

உண்மையில்  தூக்கமும் ஒருவித இறப்புதான்........தற்காலிக இறப்பு தூங்கி விழிக்கும் ஒவ்வொரு நாளுமே பிறந்த நாள்தான் 

பெரிய தலைவர்கள்,அறிஞர்கள் சொல்லிச் சென்றவைகளை எதுவும் பின்பற்றாமல் அவர்கள் பிறந்த நாள் அன்று இனிப்பு வழங்கியும் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தும் தங்கள் மரியாதையை காட்டும் இவர்கள்.......
உண்மையில் இறந்து போன அந்த தலைவர்கள் இருந்தால் அவர்களுக்கு அடிதான் விழும் 

இன்று உச்சகட்டமாக வாழும் அரசியல்தலைவர்கள் தங்கள் பிறந்தநாளை தொண்டர்கள் மூலம் மரம் நடுதல்,(தொண்டு நிறுவனங்களுக்கு என்று) உண்டியல் வசூலித்தல்,...இன்னும் பல கூத்துக்கள் அரங்கேற்றி மகிழ்கின்றனர் 

பிரபலங்களும் நடிகர்களும் பிரியாணி போடுதல்,போஸ்டர் அடித்தல் என்று தொடர்ந்து இன்றைய சமுக வலைத்தளங்களின் ஆதிக்கத்தால் வலைதளம் முழுக்க ஒருபுறம் வாழ்த்துக்களும் இன்னொருபுறம் அவர்களை விரும்பாதவர்களின் அவதூறுகளும் குவிந்து கிடக்கின்றன.......

கடவுளுக்கு கூட எந்த மதம் என்று இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள் அட..முடப் பதர்களே கடவுள் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்று சொல்லும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிவீர்களா?

வேண்டுமெனில்..........
அவரவர் பிறந்தநாளை அவரவர் இல்லங்களில் வைத்து கொண்டாடுங்கள்....அதை ஏன் விளம்பரப்படுத்தி உங்கள் விவேகத்தை தொலைக்கின்றீர்கள்..........


இதுல  கூத்து என்னன்னா....?
இந்த சினிமாவுல நடிக்கிற அம்மணிக வருஷம் வருஷம் பிறந்தநாள் கொண்டாடினாலும் அவியிங்க வயசு மட்டும் என்றும் பதினாறு.... அதுதான் சாமி எதுவும் புரிய மாட்டேங்குது.....இப்படி திண்டாடுற இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தேவையா?


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1