google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மோடி அரசின் பட்ஜெட் 2014 பற்றிய உங்கள் மதிப்பீடு?

Thursday, July 10, 2014

மோடி அரசின் பட்ஜெட் 2014 பற்றிய உங்கள் மதிப்பீடு?


 மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி இன்று வெளியிட்ட பட்ஜெட் 2014 பரமாத்மா குருவும் அவரது சீடர்களும் சேர்ந்து தயாரித்தது போல்.............இது மூடர்களின் முட்டாள் பட்ஜெட்டா? 

நாட்டின் வறுமைக்கும்  வேலையில்லா திண்டாட்டத்திற்கும் தீர்வு காணாத இந்த பட்ஜெட் அலகாபாத்திலிருந்து ஹால்டியா வரை கங்கையை இணைப்பதற்கு ரூ.4200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது மோடியின் தொகுதிற்கு உட்பட்ட கங்கை நதியை சுத்தப்படுத்த ரூ.2037 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு ரூ.2037 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது - See more at: http://www.satrumun.net/2014/07/blog-post_7382.html?utm_medium=twitter&utm_source=twitterfeed#sthash.Ymd9ngHN.dpuf
கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு ரூ.2037 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது - See more at: http://www.satrumun.net/2014/07/blog-post_7382.html?utm_medium=twitter&utm_source=twitterfeed#sthash.Ymd9ngHN.dpuf

கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு ரூ.2037 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது - See more at: http://www.satrumun.net/2014/07/blog-post_7382.html?utm_medium=twitter&utm_source=twitterfeed#sthash.Ymd9ngHN.dpuf
ஆப் கி பார் மோடி  சர்க்காரின் நிதியமைச்சர் ஜெட்லி...

 2014-ம் ஆண்டு பட்ஜெட்டில் 2050-க்குள்  அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேர மின்சாரவசதி என்றும்... 

2019ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் ஜெட்லி  சொல்வது    ஜீபூம்பா மந்திரவாதிபோல்...

தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் ஜவுளிப்பூங்கா அமைக்க ரூ200 கோடி ஒதுக்கீடு.......

ஜெட்லி அய்யா... இதுபோன்ற எத்தனையோ பூங்கா பூக்களை இதற்கு முன்பு மன்மோகன் சிங்,சிதம்பரம் அய்யாக்களும் போதாக்குறைக்கு இங்கே உள்ள அய்யாக்களும் அம்மாக்களும் எங்கள் காதில் நிறையவே பூ சுற்றிவிட்டார்கள்


2,29,000 கோடி ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு! காந்திய  அஹிம்சா  நாட்டில் எதிரி நாடுகளை  பயம்காட்ட என்றால்... சரி பரவாயில்லை 
தினம் 42 ரூபாய் சம்பாதித்தால்  பணக்காரன் என்று சொல்வது.......?

மோடி மன்னா.....நம் மந்திரியார்களின் தினவருமானம் இதைவிட குறைவு  

என்று சபையில் புலம்புகிறார்கள் கொஞ்சம் கவனியுங்கள்.......



இரும்பு மனிதர் வல்லபாய் படேல்   சிலையை உலகிலேயே மிகப்பெரிய சிலையாக வைக்க  ரூ.2 ஆயிரம்  கோடிசெலவிட  உள்ளீர்களே உலைவைக்க வழியில்லை சிலை வைப்பது வலிக்கிறது என்று இன்று அவர் உயிரோடு எழுந்துவந்து உதைக்கலாம்

இன்று  இந்தியாவில் 1.5 கோடி இளம் இன்ஜினியர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றார்களே அவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்...? எதுவும் இல்லை உங்கள் பட்ஜெட்டில்...

இந்த மத்திய பட்ஜெட் 2014-ன் எதிரொலி காரணமாக, சிகரெட் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கிறது. செல்பேசி, கம்ப்யூட்டர் விலை குறைகிறது..........அடடா........இதுதான் மக்களுக்கான பட்ஜெட்டா? 

வேலையில்லா  திண்டாட்டம் வறுமை ஒழிப்பு இவைகளை தீர்க்காத எந்த அரசும் இனிவரும் காலங்களில் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது 


நண்பர்களே! உங்கள் பார்வையில்.............

மோடி அரசின் பட்ஜெட் 2014 பற்றிய உங்கள் மதிப்பீடு?

What is  Your rating of Budget 2014?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........... 
பட்ஜெட்  பற்றிய சில சுவையான ட்விட்கள்..........


நாடோடி @mosi002 
பெரும்பாலும் வரவேற்க்கத்தக்க அம்சங்கள் கொண்ட பட்ஜெட்-கலைஞர் #என்ன தலீவா இந்த சீன்ல நீங்க எமோசனலா திட்டி பேசணும்.டைமிங் மி

RAஜேSH!!!!@mylairajesh 
தமிழகத்தின் இரண்டு தலைகளும் பட்ஜெட்டுக்கு ஆதரவு! பெங்களூரும் திகாரும் நல்லாவே வேலை செய்யுது! .....ஸ் பண்ணுரிங்க

நாயோன்@writernaayon 
மன்மோகன் சிங்: இது மட்டமான பட்ஜெட்! 
சோனியா காந்தி: எங்களுடையதை அப்படியே காப்பி அடித்திருக்கிறார்கள்.

ரசிகன்@BA_LA89 
நாட்டை முன்னேற்றும் நல்ல துவக்கம்- பட்ஜெட் பற்றி விஜயகாந்த் கருத்து# அற்புத கருத்த சொன்ன கேப்டனுக்கு சரோஜாதேவி யூஸ் பண்ண சோப்பு டப்பா இலவசம்

ஜானகிராமன்@saattooran 
பட்ஜெட்டில் கங்கையை தூய்மைப்படுத்த மட்டும் ரூ.2,037 கோடி ப்ளஸ் என்.ஆர்.ஐ. நிதி!! -கங்கையில் கரைக்கப்படப்போகும் பெருங்காயம் !

நா.குமரேசன்@kumaresann45 
பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது-ராகுல்# என்னது! பட்ஜெட் வாசிச்சிட்டாங்களா?! எழுப்பி விடாம இப்படி ஏமாத்திட்டிங்களே!


ட்விட்டர்MGR @RavikumarMGR 
செருப்பு விலை குறைகிறது!#வாங்கி எல்லாரும் நம்மள நாமே அடிச்சிக்கிற வேண்டியது தான்!

கனியன்@Kaniyen 
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது! - ராமதாஸ் # மகனுக்கு அமைச்சர் பதவி கிடைச்சிருந்தா இதே பட்ஜெட் இனிப்பானதா இருந்திருக்கும்!

பாரதி@BharathiBigB 
ரூ.500 கோடியில் தமிழ்நாடு, ராஜஸ்தானில் சூரியமின்சக்தி திட்டம் # ராஜஸ்தான்ல தான் அது சூரியமின்சக்தி திட்டம் இங்க அது அம்மா மின்சக்தி திட்டம்

ட்விட்டர் SUN@PARITHITAMIL 
டாஸ்மாக் வருமானத்தில் ஆட்சி நடத்தும் அம்மாவுக்கும் சிகரெட் வருமானத்தில் ஆட்சி நடத்தும் மோடிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை

அறுந்த வாலு@iamvaalu 
யார் வீட்டு காசுல யாருக்கு சிலை வைக்கிறது !!! யார் கிட்ட கேட்டு இதல்லாம் செய்யுறார் அவர் ??? #ModiBudget

எமகாதகன்!!!்@Aathithamilan 
வரிக் குதிரைகள் கட்டவிழ்த்து விரட்டப்பட்டுள்ளது அவை வருமைக்கோட்டையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
எல்லா அரசும் தொலைநோக்குப்பார்வையில் தான்பட்ஜெட் போடறாங்க.நாளைக்கு கிடைக்கும் பலாக்காய் புராணம் வேணாம்.இன்னைக்கு கிடைக்கும் கிலாக்காய் எது?

வில்லன் ராஜா@Rajasirr 
டாஸ்மாக் கொண்டு வந்த அம்மா க்கு மலிவு விலை சிகரெட் கொண்டு வர தெரியாது #கவலைப்படாதிங்க தமிழர்களே

சுட்டபழம்@suttapazham 
வருசா வருசம் புது வருஷத்துக்கு போடுற சபதம் மாதிரிதான் வருசா வருசம் போடுற பட்ஜெட்டும். நிறைய விஷயம் இருக்கும் ஆனா ஒன்னுமே நடக்காது.

Sushima Shekar@amas32 
புது பட்ஜெட்டில் ' வைரம், நவரத்தினக் கற்களின் விலை குறையும்.' பெண்களை கவருவது எப்படி என்று ஜெட்லிக்குத் தெரிந்திருக்கிறது!

வால்டர் வடிவேல்@murugan_vadivel 
கசப்பு மருந்துன்னு சொல்லிட்டு இனிமா குடுக்குறதுக்கு பேருதான் பட்ஜெட் # வகுத்தால போகும்

மாயவரத்தான்....@mayavarathaan 
பட்ஜெட்டுனாலே சோப்பு விலையெல்லாம் குறையுதாம். அடப்பாவிகளா..இது தெரியாமா அரை டஜன் ஏற்கனவே வாங்கி ஸ்டாக் வெச்சுப்புட்டேனே! 

உடன்பிறப்பே @udanpirappe 
இந்திய பட்ஜெட்கள் எப்போதும் ஒரே வகைதான் ,அது அம்பானிகளுக்கு ஐஸ் வைக்கவும் ,அறுக்கானிகளுக்கு ஆப்பு வைக்கவும் தவறுவதில்லை

Keerthivasan@kvasan_c 
இந்த பட்ஜெட்டை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? தக்காளி இப்படி நான் குழம்பி போனதேயில்லை... வாழ்க ஜெட்லி!

ரைட்டர் வாழவந்தான்@Iam_SuMu 
நல்ல துணிச்சலான பட்ஜெட்தான், ஆனாலும் இந்த 18" டிவி மேட்டரைதான் ஜீரணிக்கவேமுடியல! உங்களுக்கே ஓவரா தெரியலியா சென்ட்ராயன்?

கரிகால் சோழன் பேரன் @guruvithya_arts 
கால் வலி: இருக்கையில் அமர்ந்து பட்ஜெட் உரையை வாசித்த அருண் ஜெட்லி அதன் மக்களுக்கு நெஞ்சு வலி கொடுத்து விட்டிங்களே போதாதா

  



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1