google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வேட்டிக்கு எதிராக கிளப்(ம்)பியது வெட்டிப் பிரச்சனையா...?

Monday, July 14, 2014

வேட்டிக்கு எதிராக கிளப்(ம்)பியது வெட்டிப் பிரச்சனையா...?

                     (வேட்டி வீரத்தின் அடையாளம் என்று காட்டிய தல அஜித்துக்கு நன்றி)

வேட்டி கட்டி வந்ததால் முன்னாள் நீதிபதிகளை சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த விழாவில் அனுமதிக்க மறுத்தது நியாயமா? நியாயன்மார்களே! என்று நம் தமிழ் இனமான தமிழர் தலைவர்கள் வேட்டியை வரிஞ்சு கட்டி நிற்கிறார்கள்......

இது  தமிழர்களின் நாகரிகத்துக்கும் பண்பாட்டுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்கிறார் மதிமுக பொது செயலாளர் வைகோ.

வேட்டி கட்டி வரக்கூடாது என்ற விதியை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்  ஞானதேசிகன் 


தமிழர்களின் கலாச்சாரத்தின் அடையாளம் வேட்டி. அதை அணிந்து வரக்கூடாது என்று தடை விதிப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்று பதில் அளித்துள்ளார் தமிழ் இனத் தலைவர் கலைஞர்

அரசியல்வாதிகளின் கூற்று இவ்வாறு இருக்க......

'வேட்டி தமிழர்களின் ஆடை மரபின் அழகிய வெளிப்பாடு. பாரம்பரியத்தின் அடையாளம். வேட்டி கட்ட தடை, கலாச்சாரத்தின் மீதான தாக்குதலை தகர்க்க வேண்டும்என்கிறார்   கோ–ஆப்டெக்ஸ் மூலம் வேட்டி தினத்தை அறிமுகப்படுத்தி வேட்டியின் பெருமையை நிலைநாட்டிய அதன் இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம்

ஆனால்......

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிளப் வேட்டிக்கு எதிராக கிளப்பிய இந்த வெட்டிப் பிரச்னையை சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் இப்போது இப்படி ஊதி பெரிதாக்கும் நம்ம அரசியல்வாதிகள்.....

 ஈழ தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே செய்த போர்க்குற்றம் மீது  மோடியின் அரசின் நிலைபாடு காங்கிரஸ் அரசின் நிலைபாட்டையே கடைபிடிப்பதாக அறிவித்துள்ளதை நீர்த்துபோகச் செய்யும் செயல் என்கின்றனர் அரசியல் விமர்சிகர்கள்


நான் அறிந்த அளவில்........

நம் தமிழ்நாட்டு தலைவர்களில் வெளிநாடு சென்றாலும் நம் பாராம்பரிய வேட்டியுடன் சென்ற ஒரே தலைவர் காமராஜர் என்று...........

ஆனால்  இன்று பொங்கியெழும் நம் அரசியல் தலைவர்கள்  வெளிநாடு சென்றபோது வேட்டிகட்டி சென்றார்களா...? கோட்டு போட்டு சென்றார்களா...? என்பதை நீங்களே அறிவீர்கள் 


வேட்டிக்கு தடை விதித்தது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட கிளப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி  அறிவித்துள்ள நிலையில் நம் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்வது......... 

தமிழர்களுக்கு  எதிராக அண்டைநாடு செய்யும் மீனவர் பிரச்சனை,அண்டை மாநிலம் செய்யும் நீர் பிரச்சனை, தமிழ் ஆசிரியர்கள் நீக்கம்....என்று எத்தனையோ பிரச்சனைகள் இருக்க...

இப்படி வேட்டிக்கு எதிராக கிளப்(ம்)பியது வெட்டிப் பிரச்சனையா...? 



 வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......
 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1