google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அர்னால்ட் தமிழர்களின் கூத்தாடி மோகத்துக்கு கொடுத்த சாட்டையடி

Wednesday, September 17, 2014

அர்னால்ட் தமிழர்களின் கூத்தாடி மோகத்துக்கு கொடுத்த சாட்டையடி


ஐ படத்தின் இசை வெளியிட்டுக்கு வந்த ஹாலிவுட் பிரபல நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் பாதி நிகழ்ச்சியிலேயே அத்துக்கிட்டு ஓடிப்போனது ஏன்...? உளவியல் ரீதியான ஓர் ஆய்வு 


ஓர் ஆஸ்திரிய நாட்டில் பிறந்த அமெரிக்க ஹாலிவுட் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர்,சமுக ஆர்வலர்,தொழிலதிபர், முதலீட்டாளர், எழுத்தாளர், கொடையாளி, முன்னாள் தொழில்முறை பாடி பில்டர் மற்றும் அரசியல்வாதியான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் சிறு வயதிலையே  உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டு 20 வயதில்  Mr. Universe பட்டமும் 7 முறை Mr. Olympia பட்டமும் வென்றவர்  


அதுமட்டுமல்லாமல் "டெர்மினேட்டர்" போன்ற படங்களில் நடித்து ஹாலிவுட் ஆக்ஷன் படங்களின் ஐகான் ஆக உலகப் புகழ் பெற்ற அர்னால்ட் என்ற பிரபலத்தை ஷங்கரின் ஐ படத்தின் இசை வெளியீடு என்று சென்னைக்கு அழைத்து வந்து தமிழ்நாட்டில் மட்டுமே  பிரபலமான மாநில முதல்வரை சந்திக்க வற்புறுத்தியது  மிகவும் கொடுமை 
ஒரு பிரபலத்துக்குதான் தெரியும் இன்னொரு பிரபலத்தை சந்திப்பதில் உள்ள சங்கடம் என்ன என்று.....

தலைமைச் செயலகத்திலிருந்து வெளியே வந்த அவரை ஓர் அபூர்வ பிராணி போல் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தது அதைவிடக் கேவலம் 
அவரே ஏன் இந்த மக்கள் இப்படி கூட்டமாக கூடியிருக்கிறார்கள்.....? என்று கேள்வி எழுப்பி இவர்களுக்கு நான் ஏதும் செய்ய வேண்டுமா...? என்று கேட்டதும்......
அய்யோ பாவம் அர்னால்ட்-க்கு தெரியாதே இந்த தமிழ்கூட்டம் கூத்தாடிகளின் ஆட்டம் பாட்டத்திற்கு மயங்கி நாட்டையே தானம் கொடுக்கும் அறிவிலாதவர்கள் என்பது.

அதிலும் அவரை கூடியிருந்த கூட்டம் முன்பு தமிழில் வணக்கம் சென்னை என்று சொல்ல ஊடக நிருபர்கள் வற்புறுத்தியபோது......
அதை மறுத்த அவரோ கட்டுகோப்பான உடல் கட்டுடன் அருகிலிருந்த உயர் போலிஸ் அதிகாரியை அரவணைத்துக் கொண்டது ஆச்சரியமில்லை 
(ஒருவருக்கு வெறுப்பு வரும் போது தங்களுக்கு பிடித்த விசயங்களில் மனதை மாற்றி ஈடுபடுவது இயல்பு என்று பிரபல மனோதத்துவ நிபுணர் குஜ்சலாங்குடி சிக் மண்டு ப்ராடு சொல்கிறார்)
மேலும் காலதாமதமாக தொடங்கிய ஐ படத்தின் இசை வெளியிட்டு விழாவின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தைக் கண்டு வெறுப்பின் உச்சநிலைக்கு சென்ற அதரடி நாயகர் அர்னால்ட் சென்னை பாடி-பில்டர்களின் சிறப்பு நிகழ்ச்சியைக் கண்டதும் ஆவல் மிகுதியில் மேடையேறி அவர்களை ஆசுவாசப்படுத்தியத்தில் ஆச்சரியமில்லை 
அத்தோடு ஹாலிவுட்டில் எத்தனையோ விழாக்களை கண்டுகளித்த அர்னால்ட்...
இசை வெளியீடு என்று தொலைக்காட்சிக்காக மணிக்கணக்கில் நடை பெரும் இப்படி ஒரு கோமாளி கூத்தைக் கண்டிராத அவர் கடைசியில் போங்கடா புஸ்க்கு என்று புண்ணாக்கு தலையர்களை விட்டு பாதியில் ஓடிப்போனார்


arnold
இது  
நிஜத்தில் போலியாக நடிக்கத் தெரியாத 
மாபெரும் உலக நடிகர் அர்னால்ட்.....
தமிழர்களின் கூத்தாடி மோகத்துக்கும் 
தமிழர்களை ஏய்த்துக் கொண்டிருக்கும் 
தமிழ் சினிமா  கூத்தாடிகளுக்கும்  கொடுத்த சாட்டையடி! 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1