google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அர்னால்ட்டும் அதிமுக அம்மாவும் (ட்விட்டர்கள் பார்வையில்...)

Monday, September 15, 2014

அர்னால்ட்டும் அதிமுக அம்மாவும் (ட்விட்டர்கள் பார்வையில்...)

சென்னையில் நடக்கும் ஐ பட இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்த அர்னால்ட் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை  சந்தித்தது குறித்து தனது பேஸ்புக்கில்.........

"தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் தமிழகத்தில் அவர் செயல்படுத்திவரும் திட்டங்கள் பாராட்டத்தக்கது தமிழக வளர்ச்சிக்கு அடிப்படையாக கல்வி,தொழில் போன்றவை இருக்கிறது மிகச் சிறந்த தலைவியாக அவர் செயல்படுகிறார் அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி"....என்று தெரிவித்தார் 


கடந்த ஆண்டு தொழில்,பொருளாதார வளர்ச்சியில்   தமிழகம் இந்தியாவில் கடைசி மாநிலமாக இருப்பதும் 

அதேநேரம் டாஸ்மாக் மது விற்பனையில் தமிழகம் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பதும்........அய்யோ....பாவம்.அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

தெரிந்தாலும் படங்களில் தைரியசாலியாக நடித்த அவருக்கு நேரில் சொல்வதற்கு  தைரியம் இருக்காது சொன்னால் படம் ஆய் படமாகிவிடும் 

கோலிவுட் நடிகர்கள் பத்தடி தாண்டினால் ஹாலிவுட் நடிகர் பதினாறு அடி தாண்டிவிட்டார்........




ட்விடர்கள் பார்வையில்..........

sathm@sathm 
அர்னால்ட்கிட்ட ஹாய் சொல்லாத, வணக்கம் வைன்னு சொல்றாங்க. #கொடுமைஸ். அவர் சிம்பிளா தலையாட்டிட்டு போய்ட்டார் :))

சூடு பட்ட பூனை@poonai 
ஐ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த அர்னால்டு ஜெ.வை சந்தித்தார் #தமிழ்நாட்டுல "ஜெ"க்கு அப்புறம்தான் "ஐ"

Senthazal Ravi@senthazalravi 
எங்க ஊர் பாட்டுக்காரன அர்னால்ட வெச்சு எடுக்கறோம் சார். மாட்ட அப்படியே அலேக்கா தூக்கி பால் கறக்கறார் சார். 100 நாள் விழாவுக்கு ஜெட்லி சார்..

jayarajpandiyan@jayarajpandiyan 
அர்னால்டை மீட் செய்ய முடியாததால் இன்றைய கலைஞரின் முகனூல் டைம்லைனில் "தம்பி அர்னால்டுடன் அரியப்புகைப்படம்னு" போடவில்லை

பட்டதாரி@sathish381277 
தமிழகமுதல்வர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பாராட்டத்தக்கது : அர்னால்ட்புகழாரம #சாரே உண்மைய சொல்லுங்க! ஷங்கர் சொல்லிதானஎங்க CMபேர் தெரியும்

நாகசோதி நாகமணி @nagajothin 
ஜெ - அப்புறம் அர்னால்ட் டாஸ்மாக் பக்கம் போனிங்களா,சரக்கு எல்லாம் எப்படி இருக்கு,,? அர்னால்ட் - 70ரூ சரக்கு 80ரூ பேரு என்ன மேடம்..?

கொரியன்@mokkasaami 
ஜெயலலிதாவை சந்திக்கிறார் அர்னால்ட்..#யோசிக்காம கால்ல உழுந்துருயா அடுத்த அமெரிக்க ஜனாதிபதி நீதான்

ராஸ்கோலு@RazKoLu 
ஊர்ல காது குத்து பங்சன் அர்னால்ட்ட எப்படியாவது டேட் வாங்கிபுடணும்.

காளையன்@Aruns212 
முதல்வரை அர்னால்ட் சந்திக்க இருக்கிறார் # The judgement day பத்தி பேசுவாங்களோ!?

இளையகாஞ்சி@ilayakaanchi 
கருப்பு அர்னால்ட் எங்க கேப்டனே..என்றால் மிகையாகாது!!!

சிவ-தாண்டவம்@Corp_Tshirt 
ஐ பட பாடல் வெளியீட்டிற்கு வெளி நாட்டில் இருந்து வருகை தரும கர்நாடக சங்கீத சக்ரவர்த்தி அண்ணன அர்னால்ட் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்...

கத்தி UPGRADE 8.1@doll_fb 
அர்னால்டு கிட்ட "பாடி"காட்ட சொன்னா?#ஓடிட்டன்

உளவாளி @withkaran 
அர்னால்ட கூட்டியாறது சரி..தப்பித்தவறி பாட்ட கேட்க சொல்லிராதீக..அப்பறம் தூக்கிப்போட்டு எல்லாத்தையும் மிதிச்சிட்டு போயிருவாப்டி.



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1