google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பேஸ்புக் சமுக வலைத்தளம் Vs பத்திரிகை ஊடகங்கள்

Sunday, September 7, 2014

பேஸ்புக் சமுக வலைத்தளம் Vs பத்திரிகை ஊடகங்கள்

ட்விட்டர், பேஸ்புக் சமுக வலைத்தளங்களால்  சமுதாயத்திற்கு ஆபத்து என்றும் அவைகளை   தடை செய்ய வேண்டும் என்று சில வாரப்பத்திரிகைகள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன........

அந்த வாரப்பத்திரிகைகளை கேலி செய்வதே இன்றைய பேஸ்புக் ட்ரென்ட்....

"எந்த கவர்ச்சி படம் போட்டாலும் இப்பல்லாம் புத்தகம் விக்க மாட்டேங்குது சார்" என்றபடி வந்து அமர்ந்தார் அந்த பத்திரிகையின் சினிமா நிருபர் மாமா மணி.

"ஏன்.. எல்லாமே நெட்டில் சுட்டதுதானே. இது வாசகர்களுக்கு பிடிக்கலையாமா?"
என்று கேட்டார் பத்திரிகையின் ஆசிரியர்.


"ஆமா சார். எந்த படத்தை போட்டாலும், அதை ஏற்கனவே நெட்டில் அவங்க பார்த்திடுறாங்க. என்ன செய்வது?, புதுசுன்னு நம்ம நினைக்கறதெல்லாம் ஏற்கனவே நெட்டிலிருந்து சுட்டு அவங்க ஃபேஸ்புக்ல பலான பேஜ்ல போட்டுக்கறாங்க. இப்படியே போனா நம்ம கல்லாக்கட்ட முடியாது"

"பேஸ்புக் சமுதாயத்துக்கு ஆபத்துன்னு ஒரு ஆர்ட்டிக்கல் ரெடி பண்ணிடுங்க. மத்திய அரசு தடை போடனும்ன்னும் அதில் ஒரு வரியை சேர்த்துக்கங்க."

"ஏன் சார்"

"பின்னே அவங்களை தடை செஞ்சாத்தானே நம்ம கடை விரிக்கலாம். இல்லாட்டி நம்ம எழுதறதையெல்லாம் கழுவி ஊத்துவானுக. நம்ம பொழைப்பு கெட்டு போச்சுன்னா பழையபடி ப்ரோக்கர் வேலைக்குத்தான் போகனும்"

"சூப்பர் ஐடியா சார்"

..............என்று  அந்த வாரப்பத்திரிகைகளை நையாண்டி செய்து நகைச்சுவையாக எழுதுகிறார்  என் முக நூல் நண்பர் ரஹீம் கஸாலி 

சமூகத்த சீரழிக்கிற பேஸ்புக்க தடை செய்யுமா மத்திய அரசுன்னு கேட்டுருக்க குமுதம் பத்திரிகையோட சமூக அக்கறைய பாத்து நான் வியக்கேன்.....


#‎அட்டை‬ படத்துல அரை டவுசர் போட்ட அனுஷ்கா,நடுப்பக்கத்துல நனைஞ்சு நிக்கிற நமீதா, கடைசி பக்கத்துல கண்ணடிக்கிற கனகா ன்னு கலாச்சார சீரழிவிற்கான விதைகளை வீடுகளில் வியாபாரம் செய்த வீணாப்போன பத்திரிகைலாம் பேஸ்புக்க தடை பண்ண சொல்லுறத பாத்து நான் மறுபடி மறுபடி வியக்கேன்......

...........என்று எழுதுகிறார்  ராஜா அறந்தாங்கி

ட்விட்டர், பேஸ்புக்  சமுக வலைதளங்களால்  சமுகத்தில் நடக்கும் ஒரு நிகழ்வு,அரசியல்வாதிகளின் நடவடிக்கை,சினிமா போன்றவைகளைப்  பற்றிய   பல ஆயிரக்கணக்கான மக்களின் விருப்பு வெறுப்பு கருத்துக்களை நாம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது   

அவைகள் இன்று நல்ல தகவல் தாங்கியாகவும் உலகின் பல்வேறு இடங்களில் நடப்பவைகளையும் நல்ல பயனுள்ள குறிப்புகளையும்  உடனுக்குடன் செய்தியாகவும், படங்களாகவும் நமக்கு அளிக்கின்றன 

அதேநேரம்

ட்விட்டர், பேஸ்புக்  சமுக வலைதளங்கள் சில அரசியல்,சினிமா பிரபலங்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கின்றன சில திட மனது இல்லாதவர்கள் அவைகளால் சீரழியும் நிலையும் உண்டு  


ஆனால் அதே சீரழிக்கும் வேலையைத்தான் சமுதாயத்தில் உள்ள பத்திரிகைகளும் செய்கின்றன

மேலே உள்ள தவளை மோட்டார் பைக் ஓட்டும் படம் பார்த்திருக்கின்றீர்களா? இது போட்டோ ஷாப் வேலைப்பாட்டில் உருவாக்கப்பட்ட படம் இதை இன்டர்நெட் பிரபலமாகாத சில ஆண்டுகளுக்கு முன்பு இதே தமிழ் வாரயிதழ் இந்தியாவில் அரியானா மாநிலத்தில் வாகன மெக்கானிக் ஒருவர் தான் வளர்க்கும் தவளைக்கு செய்து கொடுத்ததாக செய்தி வெளியிட்டு இருந்தது 

என் பதிவுலக நண்பர்களே! எத்தனை பேர் இதை வாசித்தது நினைவுக்கு வருகிறதா...? 

சமுக வலைத்தளங்களின் அதீத வளர்ச்சியால்.....
இனிமேல் இந்த பத்திரிகை ஊடகங்கள் இது போன்ற தில்லாலங்கடி வேலைகளை செய்யமுடியாது அதனால்தான் பேஸ்புக்கை தடை செய்ய தூண்டுகின்றதோ........?



 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1