google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்

Saturday, August 10, 2013

மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்


(குறிப்பு-இங்கே சினிமா Vs அரசியல் என்பது பற்றியும் இந்த மகாயுத்தம் எப்படி ஆரம்பமானது..இப்போது அதன் நிலை என்ன என்பது பற்றியும் ஓர் அலசல். )





கூத்து...நாடகம் என்று ஆன்மிகம் சமுதாயத்தில் மக்கள் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்...தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்புவதற்கு  இரத்தக்கண்ணீர் போன்ற சமுக நாடகங்கள் படையெடுத்து வந்தன...

அன்றைய சினிமா.... வருடத்திருக்கு ஓன்று அல்லது இரண்டு என்று திரைக்கு வந்து அதுவும் திரையரங்கை விட்டு ஓடாமல் அடம்பிடித்து (பக்தி) படம் காட்டிக்கொண்டிருந்த வேளையில்.. 



பெரியாரின் தொண்டர்களான பேரறிஞர் அண்ணா...கலைஞர் கருணாநிதி போன்றவர்களால் சினிமா ஊடகத்தையும் கைப்பற்றிச் சினிமாவிலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளைப்  பரப்பினார்கள்...அதற்கு கணேசன் என்ற பக்திமான் நடிகரை சிவாஜி கனேசனாக்கி நடிகர்த்திலகமாக அரிதாரம் பூசவைத்தார்கள்



தந்தை பெரியாரின் -அண்ணா கூட்டணியினருக்கும் உருவான மனஸ்தாபம் தி.மு.க.உருவாகி...அப்போது தமிழ்நாட்டிலிருந்த காமராஜரின் பொற்கால ஆட்சியைப் புதைக்க அவர்கள் சினிமாவை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினர்...அப்போதைய நடிகர்  எம்.ஜி.ஆரை புரட்சி நடிகராக்கி தங்களது திரைக்கதையால் அவரைக் கூர் படுத்தி.. குத்தீட்டியாக்கி..காங்கிரசை வீழ்த்தி..   ஒண்டவந்தபிடாரி ஊர் பிடாரி ஆனகதையைப் போலத் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தனர்.

http://f1.pepst.com/c/3EFB87/503085/ssc3/home/019/b.history.of.leaders.and.kings/mgr__mg_ramachandran__puratchi_thalaivar_mgr_.jpg_480_480_0_64000_0_1_0.jpg

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் மட்டுமல்லாது சமுதாயத்திலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத கொடைவள்ளலாக நடித்தவரும் வாழ்ந்தருமான   புரட்சி நடிகரும் புரட்சித் தலைவராகப்  பரிணமித்து.... தமிழ்நாட்டு அரசியலில் சினிமா சிம்மாசனம் போட்டு நிரந்தரமாக இடம்பிடித்துக்கொண்டார்.... 

http://img850.imageshack.us/img850/3619/ecart1301077623.jpg

கூடாரத்துக்குள் தலையை நுழைத்த ஒட்டகத்தின் கதையைப் போல உண்மையான அரசியல்.. சினிமா அரசியல்  என்றாகி அம்மா...அய்யா..இப்படி சினிமா சம்பந்தப் பட்டவர்களே ஆட்சி செய்யும் தமிழ்நாடு ஆனது


அன்று  சினிமாவில் கதாநாயகராக நடித்த  புரட்சி தலைவர் மக்கள் தலைவராக மாறி முதலமைச்சர் ஆனதுபோல்  இன்று சினிமாவில் கதாநாயகராக நடிப்பவர்கள் அனைவரும் தங்கள் சினிமா செல்வாக்கை தவறாக எடைபோட்டு நாளைய முதலமைச்சர் என்று  அவர்கள்தலையில் அவர்களே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள்...சினிமா ரசிகர்களையும் கொல்கிறார்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYB0bozXRwx38r5cIaXm-sIXlWdF01Kc0EPixrKKayK6HkJIwxwsDOaA1hc2gqOD1Z-O95sJPQK4rms9nGOXvSJxNzh4CLa5r49Oz5E6IfKi4SHDewzQMhgEPQl1Ji4mx0djlJR_KvRfPI/s400/soodhu+kwvum.png

இன்று மன்னர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் மிகப் பெரிய அறிவாளிகள் என்பதைவிட மாயங்கள் அறிந்தவர்கள்... மந்திரவாதிகள்... தந்திரவாதிகள்.... தாங்கள் ஆட்சிக்கு வந்த மாயவழியை அறிந்த இவர்கள் தங்களை அழிக்க நினைப்பவர்களின் சூதுவழியை  அறியாதவர்கள் அல்ல...தங்களைப் பாதுகாக்கவே இன்றைய சினிமா அரசியல்வாதிகள் மீண்டும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்களைச் சதுரங்க காய்களாக வீழ்த்துகிறார்கள்

அவர்கள் அவ்வாறு உஷாராக இல்லையென்றால்...அன்று இப்படித்தான் ஒரு நடிகர்  "ஆண்டவனாலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது" என்று  ஊளையிட்டு  ஆட்சிமாற்றத்தை உண்டாக்கினார்.


இன்றைய சினிமா நடிகர்கள் கருப்பு எம்ஜியார் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் விஜயகாந்த்..இன்னும் சரத்குமார்,சீமான்....இவர்கள் வரிசையில் இன்று மக்கள் இயக்கம் நடத்தும் இளைய தளபதி...இப்படியே இவர்கள்  நாளைய முதலமைச்சர் நான்தான் என்று  வரிசைகட்டி நிற்கிறார்கள்..மல்லுகட்டுகிறார்கள்...

அய்யோ...அய்யா நடிக்கும் நியாயன்மார்களே! நீங்கள் கனவு காணுங்கள் அதில் தவறில்லை...நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் நாளை நாடு உங்கள் வசப்படும்..இல்லை நீங்கள் சினிமாவில் நடிப்பது போன்று சமுதாயத்திலும் நடித்தீர்கள் என்றால் நாளை நாடு உங்களைத் தூக்கி தூர வீசிவிடும் மறந்துவிடாதீர்கள்...


மக்கள் மடையர்கள் என்று நினைத்து நீங்கள் உங்கள் பிறந்த நாளிலும் உங்கள் படம் வெளிவரும் நாட்களிலும் கோடிகளில் பணம் ஈட்டும் நீங்கள்   சில லட்சங்களை வாரியிறைத்து வள்ளல் போல் காட்டுகிறீர்கள்..உண்மை உறங்கும் அது குட்டித்தூக்கம்...நிரந்தரத் தூக்கமல்ல...

மக்களுக்கு நல்லது செய்யவே தந்தை பெரியார்...அறிஞர் அண்ணா போன்றவர்கள் சினிமாவை ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள் இன்று அந்தச் சினிமாவே சமுதாயத்தைச் சீரழிக்கும் ஆயுதமாக வளர்ந்து நிற்கிறது...

இதற்குமேலும் நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை...ஏனென்றால் இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் அனைவரும் அனைத்தும் அறிந்தவர்கள் மிகச் சிறந்த அறிவாளிகள் என்பதை நான் அறிவேன்...

(எச்சரிக்கை-நான் தனிப்பட்டு எந்த அரசியல் கட்சிக்கும்...நடிகருக்கும்...மதத்துக்கும் ஆதரவானவன் அல்ல இங்கே யாரும் தனிப்பட்டு புண்படுத்தப் படவில்லை.)


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1