google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அமானுஷ்யம் (கதைக்கவிதை)

Sunday, November 17, 2013

அமானுஷ்யம் (கதைக்கவிதை)

பேய்கள்
பில்லி சூன்யம்......
இந்த அமானுஷ்யங்கள்
வேறெங்கும் வேரிடுவதில்லை


அபிலாசையை 
ஆராதனை செய்பவர்களை
பேராசையில் புகைபவர்களை
இந்த அமானுஷ்ய ஆவிகள்
ஆவிக்கட்டிக் கொல்கின்றன 

Made with .freeonlinephotoeditor.com


வாழ்ந்த முடிந்தவர்களின்
வாழ்க்கை நிகழ்வுகளை
நாடகங்களாக்கிய
வில்லியம் ஷேக்ஸ்பியரின்
மக்பத் நாடகத்தில்....

http://www.pathguy.com/chasseriau_macbeth.jpg
 
நார்வே-அயர்லாந்தின்
கூட்டுப்படைகளை
வெற்றிகொண்ட
ஸ்காட்லாந் தளபதிகள்
மக்பத்தும் பேங்க்வோவும்  
வரும் வழியில்......

இடி மின்னல்களுக்கிடையே
விதியென வந்து நிற்கும்
மூன்று சூனியக்காரிகள்.....
அவர்கள்
சூனியக்காரிகள் அல்ல
மக்பத் மனதில்
மறைந்திருக்கும் பேய்கள்
பேராசை-வன்மம்-வஞ்சம் 

இங்கே 
"நாளைய 
இந்திய நாட்டின் 
இணையில்லாப் பிரதமரே.... "
என்பது போல....

மக்பத்தைப் பார்த்து 
அந்தச் சூனியக்காரிகள்
"நாளைய
ஸ்காட்லாந் நாட்டின்
நிஜ மன்னன் மக்பதே!"
என்று விழிக்க......
மக்பத் மனதில்தூங்கிய
பேராசை விழித்துக் கொண்டது

அந்தச் சூனியக்காரிகளின்
சூது சந்திப்பை.....
மனைவியிடம் சொல்லி
மதி மயங்கிப் போனான்

ஸ்காட்லாந் மன்னனும்
வெற்றிக்களிப்பை
விடிய விடியக் கொண்டாடி...
மக்பத் மாளிகையில்
அயர்ந்து தூங்கிட...
அபிலாசையில் மக்பத்தும்
அவரைக் கொன்றான்
 மெயக்காவலர்களையும் கொன்று
அவர்கள் மேல் பழியிட்டான்

ஸ்காட்லாந்தின் அரசனாக
மக்பத்தும் மாறிவிட்டான்
இந்தச் சூன்யக்காரிகளின் 
சூசகங்களை அறிந்திருந்த
இன்னொரு  தளபதி 
பேங்க்வோவும்
இவனால் கொல்லப்பட்டான்

http://cache.gawkerassets.com/assets/images/9/2010/02/500x_macbeth.jpg
 
ஆனாலும்
அரியாசனத்தில் மக்பத்
அவஸ்தையுடன்.......
காண்போர்களை  எல்லாம்
எமகாதகர்களாக எண்ணி...
பேங்க்வோ
போயாக வருவதாக
பிரமை மிரட்சியில்
பிதற்றிப் புலம்பினான்

அவனது மனைவியும்
மனநிலை பாதிக்க....
நள்ளிரவில் நடமாடி
எப்போதும் 
கறை படிந்த கைகளை
கழுவிக்கொண்டிருப்பாள்

File:Macbeth consulting the Vision of the Armed Head.jpg  

இதற்கிடையில்
மூன்று சூன்யக்காரிகளையும்
மீண்டும் சந்தித்த மக்பத்துக்கு....
அவனது மரணத்துக்கு 
மூன்று கணிப்புகளை
அவர்கள்  கொடுக்க...

1-தலைக் கவசம் அணிந்த
படைத்தலைவரிடம்
கவனம் வேண்டும்

2-உன்னைக் கொல்ல
பெண்ணுருப்பிலிருந்து
பிறக்காதவனாக
இருக்க வேண்டும்

3-காட்டு மரங்கள்
கோட்டை நோக்கி
நகரவேண்டும்

இந்த மூன்றும்
இந்த உலகில்
சாத்தியமில்லை
ஆனாலும்
யார் அந்தக் கவசத்தலைவன் ..?
ஆராய்வில் அவனும்
அறிந்துகொண்டான்......
அவனது எதிரி மக்டஃப்

பெண்ணுருப்பிலிருந்து 
பிறக்காதவன்
சிசேரியனில்  பிறந்தவன்
தலைக்கவசம் அணிந்த
மாபெரும் படைவீரன்

மக்டஃப் குடும்பத்தை
மக்பத்தும் அழித்தான்
ஆனாலும்
தப்பியோடிய மக்டஃப்
தன் படைவீரர்களுடன் 
மரக்கிளைகளால்
மறைத்துக் கொண்டு......
நகரில் உள்ள 
மக்பத் கோட்டையை 
காட்டிலிருந்து 
நகர்ந்து வந்து   சூழ்ந்திட...

https://lh6.ggpht.com/gy-UMPzoKp4Oytr821DckmalR30Csx935ugVBBHnvg7Bz6v8EB2G2k-IMpZE_yCAkCvr=h900
பேராசை பேய் பிடித்த 
மக்பத்தும் மடிந்தான் 
அபிலாசை  பிடித்தவன்
தன்னைத்தானே 
அழித்துக்கொண்டான் 
http://www.fullgifs.com/wp-content/uploads/2013/08/Art-ghost-gif-skulls-war-gif.gif

 
பேய்கள்
பில்லி சூன்யம்......
இந்த அமானுஷ்யங்கள்
வேறெங்கும் வேரிடுவதில்லை

எவரெவர் நெஞ்சங்களில் 
பேராசை புதைந்துள்ளதோ
அவரவர்  வாழ்வில்..........


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1