google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கவிஞர் நரேந்திர மோடி

Wednesday, July 12, 2017

கவிஞர் நரேந்திர மோடி


இந்திய அரசியலில் பல அதிரடி சிந்தனை செயல்பாடுகளில் உலகம் உற்று நோக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசியலுக்கு அப்பாற்பட்ட கற்பனை நிறைந்த உள் எண்ணங்கள், தேசிய உணர்வுகள் மற்றும் சமூக மெய்யியல் ஆகியவற்றை தன் எழுத்துக்களில்  வெளிப்படுத்திய ஒரு சிறந்த கவிஞர் ஆவார் 


டுவிட்டரில்  "நான் எப்போதாவது கவிதை மூலம் என் எண்ணங்களை எழுதியிருக்கிறேன்"என்று  உலக கவிதை தினத்தில் (World Poetry Day) இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் வெளியிடப்பட்ட அவரது கவிதை படைப்புகளை பகிர்ந்த போதுதான் அவரது கவித்துவம் வெளிப்பட்டது 

 I have occasionally penned my thoughts through poetry. The book ‘Sakshibhav’ is a collection of some of the works. http://t.co/5viOHLGkvp
— Narendra Modi (@narendramodi) March 21, 2017

Another set of poems, these in Gujarati. http://t.co/BUyEbwj7kK #WorldPoetryDay
— Narendra Modi (@narendramodi) March 21, 2017

கவிஞர் நரேந்திர மோடி குஜராத்திமொழியில் எழுதிய கவிதைகளில் தேசபக்தி, அன்பு, நட்பு, முன்னேற்றம் போன்ற பல்வேறு விஷயங்களில் 67  கவிதைகள் ஆங்கிலத்தில் "A Journey: Poems by Narendra Modi" என்று ரவி மந்தாவால் மொழிபெயர்க்கப்பட்டது 
என் கவிதைகள் அசாதாரணமான படைப்பு அல்ல  அவைகள் தெளிந்த புது நீரோடை போன்று என் எண்ணத்தின் பிரதிபலிப்புகள் நான் சந்தித்த நிகழ்வுகளின் வெளிப்பாடு,நான் அனுபவித்தவைகளின் உணர்வுகள்,என் கற்பனையின் வடிவங்கள் என்று சொல்கிறார் கவிஞர் நரேந்திர மோடி 
 அவரது கவிதைகளில் ஒன்றில்கூட அரசியல் வாடை வீசவில்லை ஒன்றில்கூட அவரது குடும்பம் பற்றிய சிந்தனை இல்லை 

இங்கே அவரது கவிதைகளில் எனக்கு பிடித்த 
THE CELEBRATION கவிதையிலிருந்து......
காத்தாடி பறக்கவிடும் திருவிழாவை பறக்கும் பட்டத்தை பார்த்து கேட்கிறார்... 
"ஓ...காத்தாடியே!
நீ வானத்தை நோக்கிய 
என் லட்சியம்!!
சூரியனை தொட்டுவிடும் 
என் பயணம்!!"  
இங்கு வானில் பறக்கும் பட்டம் அவரது தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பாக மிளிர்கிறது அவரது லட்சியத்தின் வெளிப்பாடாக உள்ளது 
அது மட்டுமா....
"என் காத்தாடி 
மற்ற காத்தாடிகளுடன் மோதாது 
மரக்கிளைகளில் சிக்காது" 

அவரது முன்னேற்ற சிந்தனை மற்றவர்களுடன் கருத்து மோதல் ஏற்படாது என்கிறார் 
ஒ காத்தாடியே!
என் சூரிய பயணத்திற்கான 
விமானமே!!

ஒரு காத்தாடியின் ஜீவன் 
அதன் நூலில் உள்ளது 
காத்தாடியின் கடவுள் (சிவா)
வானத்தில் இருக்கிறார் 

என் கையில் 
காத்தாடியின் நூல்!
சிவா கையில் 
என் நூல்!

 2014-ல் கவிஞர் நரேந்திர மோடி Saakshi Bhav பத்திரிகையில் எழுதிய 19 கவிதைகளில் தென்படும் வார்த்தைகள் அவர் ஓர் அரசியல் தலைவர் என்பதற்கும் மேற்பட்டு ஒரு சிறந்த இலக்கியவாதியாக காட்டுகிறது 

அதேநேரம் அவரது சிந்தனைகள் சுயநலமிக்கதாகவும் ஒரு குறிப்பிட்ட மத சாயம் பூசப்பட்டதாகவும் பல விமர்சகர்களால் பேசப்படுகிறது 
எது எப்படியோ...?

நீ உன் உள் உணர்வில் எதுவாக மாற நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய் என்பார்கள் 

தனிமனிதராக,கவிஞராக நரேந்திர மோடியின் எண்ணங்கள் எப்போதும் உயர்வாகவே இருந்துள்ளன அதை அடைந்தும் விட்டார் 
ஆனால் இன்று பொது மனிதராக,இந்தியாவின் பிரதமராக 
அவரது உயர்ந்த எண்ணம் நம் நாட்டையும் உயர்த்துமா...?

                                                                              (தொடரும்)


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1